கிரிக்கெட் வீரர் அஸ்வினின் தாத்தா காலமானார்!

Ravichandran-Ashwin-s-Grandfather-Passes-Away

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் தாத்தா எஸ்.நாராயணசாமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 92. ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நாராயணசாமி கிரிக்கெட் ஆர்வலர். அஸ்வின், கிரிக்கெட் விளையாடுவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் அவர் என்றும் கடந்த சனிக்கிழமை அவர் காலமானார் என்றும் அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Advertisement

அவரது இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. சாம்பியன்ஸ் கோப்பைக்காக, லண்டனில் இருப்பதால் அஸ்வின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை. மறைந்த நாராயணசாமிக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும் ஒரு மகளும் மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement