குட்கா முறைகேடு வழக்கு : முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு சம்மன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


Advertisement

குட்கா விற்பனை மூலம் ரூ.639 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் உரிமையாளர்கள், பங்குதாரர்களின் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கெனவே முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வழக்கில் சிபிஐ தரப்பில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2ஆம் தேதி டி.கே.ராஜேந்திரன், 3ஆம் தேதி கூடுதல் ஆணையர் தினகரன் ஆஜராக அமலாக்கத்துறை சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement