இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிப்பு - ஸ்டாலின் கண்டனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன், அங்குள்ள தமிழர்களின் கண்ணியத்தை குறைக்கும் பணி வேகமாகத் துவங்கி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்படுவ‌தற்கும், தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 


Advertisement

இலங்கையில் தமிழர்கள் சட்ட ரீதியான உரிமைகளுடன், ‌அமைதியாக வாழ்வதற்கும், அவர்கள் விரும்பும் தீர்வு ஏற்படுவதற்கும், ஆவண செய்திட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம்‌,‌ பிரதமர் மோடி உரிய முறையில் எடுத்துக்கூறி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement