[X] Close

திமுக செயலாளர் வெட்டிக்கொலை: உறவினர் உட்பட 7 பேர் கைது

Subscribe
7-arrested-in-DMK-ward-secretary-murder

திமுக செயலாளர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் அவரது உறவினர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் பாலாஜி( 38). திமுக வார்டு செயலாளராக இருந்தார். இவர், சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் பெயின்டிங் மற்றும் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஓடை ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.


Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரது உறவினர் ராஜா, விஜயகுமார், மன்னர் மன்னன், தினேஷ், ஐய்யனார், மகேஷ், சண்முகம் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றினர். எதற்காக இந்த கொலையை செய்தனர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close