மாசு கலந்த காற்றை சுவாசிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் கடந்த இரு மாதங்களாகவே காற்று மாசுவின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை போக்க டெல்லி அரசு பல கட்டுபாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக வாகனங்கள் இயக்குவதற்கு சில கட்டுபாடுகளை விதித்தது.
அதேபோல டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயக் கழிவுகளை விவசாயிகள் எரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லி மட்டுமின்றி வட மாநிலங்களிலும் காற்று மாசாகவே உள்ளது. காற்று மாசில் இருந்து சென்னையும் தப்பிக்கவில்லை. இப்படி உலகம் முழுவதும் காற்று மாசு அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மாசு கலந்த காற்றை சுவாசிப்பதால் உடல் எடை அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உயிரியல் பரிசோதனைக்கான அமெரிக்க சங்கங்களின் கூட்டமைப்பு எலிகளை வைத்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதில் மாசுபட்ட காற்றை சுவாசிப்பது மனிதர்களின் நுரையீரலையும், இதயத்தையும் பாதிக்கும் என்றும் இதனால் ஆஸ்துமா, சிறுநீரக பிரச்னைகள், சுவாசக்கோளாறு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 வாரங்கள் மாசு கலந்த காற்றை சுவாசித்தால், எல்டிஎல் கொழுப்பின் அளவு 50 சதவீதம் அதிகரித்து உடல் எடை அதிகாரிக்கும் என்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை