JUST IN

Advertisement

ஐஐடியில் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை: மின்விசிறிகளில் புதிய தொழில்நுட்பம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாணவர்கள் தூக்குப்போட இயலாதவாறு சென்னை ஐஐடி விடுதிகளில் உள்ள மின்விசிறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 


Advertisement

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியே என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  ஐஐடியில் தற்கொலை என்பது தொடர்கதையாகி வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் தூக்குப் போட இயலாதவாறு சென்னை ஐஐடி விடுதிகளில் உள்ள மின்விசிறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 


Advertisement

அதன்படி, விடுதிகளில் ஸ்பிரிங் வசதியுடன் கூடிய மின்விசிறிகளை பொருத்தும் முடிவுக்கு ஐஐடி நிர்வாகம் வந்துள்ளது. இந்தப் புதிய முறை விரையில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி விடுமுறைக்கு மாணவர்கள் செல்லும்போது விடுதிகளில் உள்ள மின்விசிறிகளில் ஸ்பிரிங் வசதி பொறுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஒருவர் மின்விசிறி மூலம் தற்கொலைக்கு முயலும்போது அதிலுள்ள ஸ்பிரிங் மூலம் கீழ் நோக்கி விழும் வண்ணம் அமைந்து விடும் இதனால் தற்கொலைக்கு முயலும் போது அவர் கீழே விழுந்து விடுவார். இந்த தொழில்நுட்பம் கொண்ட மின்விசிறிகளை அனைத்து விடுதிகளிலும் மாற்றியமைக்க ஐஐடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


Advertisement

மேலும், மாணவர்கள் மனரீதியிலாக வலிமை அடைய கலந்தாய்வு கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவர்களின் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து அதனை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மின் விசிறிகளில் தொழில்நுட்பத்தை பொருத்துவதெல்லாம் எப்படி தீர்வாகும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement