திருவண்ணாமலை அருகே மயானம் செல்ல உரிய பாதை இல்லை எனக்கூறி பொதுமக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேதபுரிஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் கட்டிட வெல்டிங் செய்யும் ஊழியர் ஸ்ரீனிவாசன் (40). இவர் ஆம்பூரில் கட்டிடத்தின் மேலே நின்று வெல்டிங் வேலை செய்யும் போது, தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாமல் அவதிப்படுவதாக உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 20 வருடங்களாக இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல இப்பகுதியில் பாதை இல்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் உரிய பாதை அமைத்து தரக்கோரி ஆரணி - சேத்துப்பட்டு சாலை அருணகிரி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் உறவினர்கள் ஸ்ரீனிவாசன் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை