கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓசூரை அடுத்த சொக்கநாதபுரம், கூஸ்தனப்பள்ளி, சேவகானப்பள்ளி, சிச்சிறுகானப்பள்ளி வழியாக, உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சேவகானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும், 16 விவசாயிகளுக்கு மின்கோபுரம் அமைப்பது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க, பொக்லைன் வாகனத்துடன் மின்வாரிய அதிகாரிகள் வந்தனர். இதையறிந்த விவசாயிகள், சேவகானப்பள்ளி அருகே திரண்டனர். இதையடுத்து அங்கு ஓசூர் வட்டாட்சியர் செந்தில்குமரன், தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ், முருகன், சத்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய எம்எல்ஏ பிரகாஷ், விவசாய நிலம் அல்லாத மாற்று வழியில் மின்கோபுரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆட்சியர் ஆய்வு செய்து மாற்று இடம் தேர்வு செய்யும் வரை பணிகளை துவங்கக்கூடாது என்று மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால், மின்கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்