குடை பிடித்தபடி ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் ரயில்மோதி உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மழைக்கு குடை பிடித்தபடி இரயில் பாதையில் சென்ற இரயில்வே காவலர் இரயில் மோதி உயிரிழந்துள்ளார்.


Advertisement

நாகை மாவட்டம் சீர்காழி முதல் சிதம்பரம் வரை இரயில்வே இருப்புப்பாதை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் விலையுர்ந்த செப்புக் கம்பிகள் திருடு போவதை தடுக்கவும், இருப்புப்பாதை பாதுகாப்பு பணிக்காகவும் இரயில்வே காவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். 


Advertisement

நேற்று இரவு திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் காவலர் சையது ரஹமத் பாட்ஷா( 49) என்பவர் ஓபன் லைன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். சீர்காழி இரயில் நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் இருப்பு பாதையில் ரோந்து சென்றுள்ளார். இவர் எருக்கூர் அருகே இரயில் பாதையில் நடந்து சென்ற போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. 

இதனால் குடை பிடித்துக் கொண்டு தனது ரோந்து பணியை தொடர்ந்துள்ளார். மழையின் சத்தத்தாலும் குடை பிடித்திருந்ததாலும் பின்னால் இரயில் வருவதையும் அதன் ஒலியையும் காவலர் கவனிக்கவில்லை. இதனால் அதிவேகமாக வந்த அந்தோதயா விரைவு ரயில் மோதியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சையது ரஹமத் பாட்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement