சஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை?- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் ஏன் சேர்க்கப்படவில்லை என்று ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ரிஷப் பன்ட் மீண்டும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனுபவ வீரர் மகேந்திர சிங் தோனிக்கு இந்தத் தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 


Advertisement

இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்று இருந்த சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படவில்லை. அந்தத் தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் சரியாக விளையாடவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பன்ட்டிற்கு பதிலாக வேறு ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் ரிஷப் பன்ட் தவிர வேறு கீப்பர் யாரும் இடம்பெறவில்லை. எனவே வாய்ப்பே அளிக்காமல் சஞ்சு சாம்சானை அணியிலிருந்து ஏன் நீக்கம் செய்தீர்கள் என்று ட்விட்டரில் ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில், “சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது மிகவும் கடினமான ஒன்று. ரிஷப் பன்ட் மீது அணி நிர்வாகம் அதிக நம்பிக்கையை வைத்துள்ளது.” எனப் பதிவிட்டுள்ளார். 


Advertisement

loading...

Advertisement

Advertisement

Advertisement