பழைய பேப்பரில் மறைத்து வைத்த நகையை மறந்து எடைக்கு போட்ட மனைவி

Rasipuram-Police-Jewel-Recovery-within-15-hours

பழைய பேப்பரில் மறைத்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை ஞாபக மறதியில் எடைக்கு போட்ட சம்பவம் ராசிபுரம் அருகே அரங்கேறியுள்ளது. 


Advertisement

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிவேல். இவர் சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலாதேவி. இவர் வீட்டின் பீரோவில் நகைகளை வைத்தால் திருடிவிடுவார்கள் என நினைத்து பழைய பேப்பர்களுக்கு அடியில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 16 பவுன் நகை மற்றும் வைரத்தோடு உள்ளிட்டவைகளை மறைத்து வைத்திருந்துள்ளார். 


Advertisement

இந்நிலையில் நேற்று சேலத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பழைய பேப்பர்களை வாங்க வந்துள்ளார். அப்போது கலாதேவி ஞாபக மறதியில் நகைகளோடு பேப்பர்களை எடைக்கு போட்டுள்ளார். அதன் பின்னர் ஞாபகம் வந்தவுடன் ராசிபுரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். 

உடனடியாக விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர் சேலம் சென்று செல்வராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நகைகள் இருந்தது உண்மைதான் எனவும் யாருடையது என தெரியாததால் அப்படியே வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். பின்னர் காவல்துறையினர் நகைகளை மீட்டு கலாதேவியிடம் ஒப்படைத்தனர். மேலும் நகைகளை ஒப்படைத்த செல்வராஜ்க்கு 10 ஆயிரம் பணத்தை கலாதேவி அன்பளிப்பாக கொடுத்தார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement