கொல்கத்தாவில் வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்திய நிறுவனத்தின் கட்டடத்திலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வீசியெறிந்தனர்.
நேற்று மாலை கொல்கத்தாவின் வணிக நிறுவனத்தின் கட்டடத்தில் இருந்து பண மழை பெய்தது. மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஹோக் என்ற வணிக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அலுவலக கட்டடத்தின் பல்வேறு தளங்களிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வீசினர். சில கட்டுகள் அந்தரத்தில் பிரிந்து ரூ.100, 500, 2000 நோட்டுகள் காற்றில் பறந்து தரையில் விழுந்தன. கீழே இருந்த பலரும் ரூபாய் நோட்டுகளை அவசரம் அவசமாக எடுத்துச் சென்றனர்.
திடீர் பணமழையை ஆச்சரியமாக கண்ட சிலர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். கொல்கத்தாவின் பணமழை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜன்னல் வழியாக கட்டுக்கட்டாக பணத்தை ஊழியர் ஒருவர் வீசுகிறார்.
காற்றின் வேகத்தில் சில கட்டுகள் பிரிந்து பணம் பறக்கிறது. வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து பணத்தை ஊழியர்கள் வெளியே வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH Bundles of currency notes were thrown from a building at Bentinck Street in Kolkata during a search at office of Hoque Merchantile Pvt Ltd by DRI officials earlier today. pic.twitter.com/m5PLEqzVwS— ANI (@ANI) November 20, 2019
Loading More post
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி