காதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

11ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் சுதா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த ஷாம் சுந்தர்(26) என்ற இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் சுதா பழவந்தாங்கலில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்தவர் காணாமல் போனதாக கடந்த 15ம் தேதி காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் பெண்ணே வழக்கறிஞர் மூலமாக கடந்த 18ம் தேதி காவல் நிலையம் வந்துள்ளார். அப்போது, ஷாம் சுந்தரை காதலிப்பதாகவும் பெற்றோர்களிடம் செல்ல விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளார். 


Advertisement

இதையடுத்து மாணவி கெல்லீஸ் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் பெண்ணுக்கு 16 வயது மட்டுமே ஆகி இருப்பதால் அவரை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஷாம் சுந்தரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement