JUST IN

Advertisement

காஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான தேசிய விருதுக்கு இந்திய அளவில் தேர்வாகி உள்ள 11 நெசவாளர்களில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் நெசவாளரும் ஒருவர்.


Advertisement

மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை, 2014-ஆம் ஆண்டு முதல், சிறந்த கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு, தேசிய விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கவுரவித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு, இந்திய அளவில், 11 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா என்ற நெசவாளியும் ஒருவர்.


Advertisement

திருவள்ளுவர் பட்டு கைத்தறி சங்கத்தின் உறுப்பினரான இவர், தமிழகத்தில் இருந்து இந்த விருதுக்கு தேர்வாகியுள்ள ஒரே பெண் நெசவாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கோர்வை ரக பட்டுச்சேலை நெசவுக்காக கீதாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

பெரும்பாலான பட்டு சேலைகளில், ஒரே இழையிலேயே உடல் பகுதியிலும், கரை பகுதியிலும் நெசவு செய்யப்படும். ஆனால், கோர்வை ரக பட்டு சேலைகளில் மட்டும், கரை பகுதி, உடல் பகுதிக்கென, தனி பட்டு இழைகளை பயன்படுத்தியும், நான்கு நாடாக்களை பயன்படுத்தியும், நெய்யப்படும். அதிக வேலைப்பாடுகளுடன், கோர்வை ரக சேலை நெய்யப்படுவதால், காஞ்சிபுரத்தில் இந்த சேலை அரிதாகவே கிடைக்கும். அப்படிப்பட்ட நெசவுக்காக கீதாவை தேசிய விருது நாடி வந்திருக்கிறது.  30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ளது இந்த கோர்வை ரக பட்டுப்புடவை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement