“பழைய சொத்துவரி முறையே தொடரும்” - அமைச்சர் வேலுமணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 


Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “உள்ளாட்சிகளில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்வை குறைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 

குழுவின் பரிசீலனை முடியும்வரை பழைய சொத்துவரியே வசூலிக்கப்படும். மறுபரிசீலனை செய்யும் வரை 2018 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முந்தைய சொத்து வரியை செலுத்தினால் போதும். கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்து வரி அடுத்தடுத்த ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும். சொத்துவரி குறைக்கப்பட்டதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவித்தார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement