ரஜினி, கமல் இணைந்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினி, கமல் என யார் இணைந்து வந்தாலும் அதிமுக எனும் சிங்கத்தை அசைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Advertisement

கமல்ஹாசன், தற்போது 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதைக் கொண்டாடும் வகையில் 'உங்கள் நான்' எனும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், வடிவேலு, விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குநர்கள் ஏஸ்.ஏ.சந்திரசேகர், மணிரத்னம், ஷங்கர், என ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

இதில் பேசிய ரஜினி, “தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதைபோன்ற அதிசயம் இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும்” என்றார். கமலும், நானும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், இருவரின் சித்தாந்தங்களும், கொள்கைகளும் மாறினாலும் நட்பு மாறாது என்றும், அதனால் ரசிகர்களும் அந்த அன்பை கடைபிடிக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கேட்டுகொண்டார்.


Advertisement

நிகழ்ச்சியில் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், ரஜினியும், கமலும் அரசியலில் இணைந்தால் தமிழகமும், தமிழ் மக்களும் பயன்பெறுவார்கள் என்றார். 

இந்நிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தபின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “புதிய தகவல் ஆணையர் அமைப்பது குறித்து நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி. நாங்கள் நம்பியிருப்பது வாக்காளர்கள், பொதுமக்கள். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதை ரஜினி அதிசியம் என கூறியிருக்கலாம். 


Advertisement

Image result for ஜெயக்குமார்

ரஜினி, கமல் என யார் இணைந்து வந்தாலும் அதிமுக எனும் சிங்கத்தை அசைக்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக மறைந்து விடும் என்றார்கள். ஆனால் ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது” எனத் தெரிவித்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement