JUST IN

Advertisement

தம்பியை காப்பாற்ற ஆற்றுக்குள் குதித்த அண்ணன் உயிரிழப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீரில் தத்தளித்த தம்பியை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் இறங்கிய அண்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Advertisement

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. வைகை ஆற்றிற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை பெத்தானியபுரம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் நான்குபேர் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.


Advertisement

இந்நிலையில்  குமார் என்பவரது இளைய மகன்  ஆகாஷ் ஆற்றில் மூழ்கியுள்ளார், இதனைக்கண்ட ஆகாஷின் சகோதரர் பாலமுருகன்(10) உடனடியாக ஆற்றில் குதித்து தனது தம்பி ஆகாஷை மீட்டு வெளியேற்றிய நிலையில் எதிர்பாராத விதமாக பாலமுருகன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். உடனடியாக  குளிக்கச் சென்ற சிறுவர்கள் கொடுத்த தகவலின்படி அங்கு வந்த 30 பேர் கொண்ட தீயணைப்பு படையினர் அங்குள்ள இளைஞர்களின் உதவியோடு தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

சுமார் 20 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் பாலமுருகனை உயிரிழந்த நிலையில் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement