கர்நாடக காங். எம்.எல்.ஏவை கத்தியால் குத்திய வாலிபர்- வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏவை கத்தியால் குத்தியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 


Advertisement

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள நரசிம்மராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருப்பவர், தன்வீர் சேட். முன்னாள் அமைச்சரான இவர், மைசூரில் நடந்த திருமண விழா ஒன்றுக்குச் நேற்றிரவு சென்றிருந்தார். அப்போது அவருக்கு அருகில் வந்த வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால், அவரைத் திடீரென்று குத்தினார். இதை எதிர்பார்க்காத எம்.எல்.ஏ நிலைகுலைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், கத்தியால் குத்தியவரை மடக்கிப் பிடித்தனர். 


Advertisement

குத்தப்பட்ட எம்.எல்.ஏ தன்வீரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

எம்.எல்.ஏவை குத்திய வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மைசூர் உதயகிரியைச் சேர்ந்த பர்ஹான் (20) என்பது தெரிய வந்தது. தன்னை பலமுறை வேலைக்காக அலைய வைத்தார் என்றும் வேலை வாங்கித் தராத விரக்தியில் இப்படி செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement