ரயில்களுக்குப் பின்னால் ஓடி பயணிகளின் உயிர்களை காக்கும் ‘சின்னப்பொண்ணு’நாய்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வோரை காவலர்கள் எச்சரித்துப் பார்த்திருப்போம். அதே பணியை சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நாய் ஒன்று செய்து வருகிறது.


Advertisement

சாலையில் செல்லும் வாகனங்களைப் பார்த்து குரைத்தபடி அவற்றை பின்தொடர்ந்து செல்லும் நாய்களுக்கு மத்தியில், ஒரு நாய் ரயில்களையே துரத்துகிறது. அதன் பெயர் சின்னப்பொண்ணு. பொதுவாக நாய்களுக்கு மணி, ராமு, டைகர், ஸ்வீட்டி எனப் பெயர் வைப்பார்கள். ஆனால் சின்னப்பொண்ணு பெயரில் மட்டுமல்ல, குணத்திலும் வித்தியாசமானது. 


Advertisement

கடந்த சில ஆண்டுகளாக பூங்கா ரயில் நிலையத்தில் சுற்றி வரும் சின்னப்பொண்ணு, யாருக்கும் எந்த தொந்தரவும் தருவதில்லை. மாறாக படியில் தொங்கியபடி ரயிலில் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறது.

நடைமேடையில் படுத்திருக்கும் சின்னப்பொண்ணு ரயில் வரும் போது எழுந்து நிற்கிறது. படியில் தொங்கியபடி வருபவர்களை பார்த்து குரைத்தபடி ரயிலை துரத்திக் கொண்டு ஓடுகிறது. படியில் தொங்குபவர்களை மட்டுமல்ல, தண்டவாளத்தை கடப்பவர்களையும் சின்னப்பொண்ணு விட்டு வைக்கவில்லை. அவர்களைப் பார்த்து குரைக்கிறது. அதைக்கண்டு படியில் தொங்குபவர்கள் உள்ளே செல்கிறார்கள். மேலும் சின்னப்பொண்ணு காவலர்களோடு சேர்ந்து ரோந்து செல்கிறது. இப்படி ஒவ்வொரு ரயிலுக்குப் பின்னும் ஓடி ஓடி பலரின் உயிரைக் காக்கிறது சின்னப்பொண்ணு. 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement