மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று சந்தித்து பேசுகிறார்.
மும்பையில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் இத்தகவலை தெரிவித்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து பேசியுள்ள நிலையில் இவை குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தில் உள்ள அம்சங்களை இறுதி செய்வது குறித்து சோனியாவும் பவாரும் பேச உள்ளதாக தெரிகிறது.
கூட்டணி அரசில் சிவசேனா கட்சிக்கு முதல்வர் பதவியை தர மற்ற இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் துணை முதல்வர், சபாநாயகர் உள்ளி்ட்ட பதவிகள் குறித்தும் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. சுழற்சி முறையில் தங்களுக்கும் முதல்வர் பதவி தேவை என சிவசேனா கூறிவிட்டதால் பாஜகவுடனான அதன் கூட்டணி முறிந்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி