கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது

Fake-Rupees-Notes-distribution---One-person-arrested-in-Chennai

சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


Advertisement

சென்னை அயனாவரம் ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி. இவர் அயனாவரம் மார்க்கெட் பகுதியில் சுவீட்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று கடைக்கு வந்த ஒரு நபர் சுவீட்ஸ் வாங்கி விட்டு, ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார். சந்தேகமடைந்த அருணகிரி அந்த ரூபாய் குறித்து விசாரித்த போது, அந்த நபர் ஓடினார். ஆனால் அவரை விடாமல் அருணகிரி துரத்திச் சென்றார். 

அயனாவரம் கேஎச் சாலையில் வைத்து ஆட்டோவில் ஏறி தப்ப முயன்ற அந்த நபரை, அருணகிரி பிடித்து அயனாவரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த நபர் கொடுத்த பணம் கள்ள நோட்டு என்பது தெரிந்தது. மேலும் அவரிடம் சோதனை நடத்தியதில் 12 ஆயிரத்திற்கு ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. 


Advertisement

விசாரணையில் அந்த நபர் ஓட்டேரியைச் சேர்ந்த ஏழுமலை என்பதும், சமையல்காரராக பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். தனக்கு சதீஷ் என்பவர் பணம் கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சதீஷ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement