இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை பெற்றுள்ளார்.


Advertisement

இலங்கை அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவு அடைந்தது. இந்தத் தேர்தல் புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபய ராஜபக்ச இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். 


Advertisement

அத்துடன் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபகசவைவிட சஜித் பிரேமதாச அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.  முதலில் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் இருந்தார். அதன்பிறகு சில நேரங்களுக்கு முன்பு இந்தத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை பெற்று இருந்தார். இவர் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவை விட சுமார் 1 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும்  கோத்தபய ராஜபக்ச முன்னிலை பெற்றுள்ளார். இவர் தற்போது சஜித் பிரேமாதாசவைவிட 37 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement