இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமையிலிருந்த காப்பாற்றிய நபர்களே அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நொய்டா பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு, செக்டார் 63 பகுதியிலுள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் பார்க்க சென்ற நபரே, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அந்தப் பெண் அலறி சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த இடத்திற்கு வந்த இருவர் அப்பெண்ணை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர்கள் இந்தப் பெண்ணை தனது நண்பர்களுடன் இணைந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நொய்டா பகுதி காவல்துறையினர், “இந்தப் பெண் வேலைவாய்ப்பு தொடர்பாக பேச கடந்த ரவி என்பவரை புதன்கிழமை பூங்கா ஒன்றில் சந்திக்க சென்றுள்ளார். அப்போது ரவி அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை ரவியிடமிருந்து இருவர் காப்பாற்றி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர்கள் இருவரும் தங்களது நண்பர்கள் மூவரை அழைத்து இப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அப்பெண் இரவு 9.30 மணியளவில் காவல்துறைக்கு தகவல் அளித்தார். அவர் கொடுத்த தகவலை வைத்து ரவியை நாங்கள் கைது செய்தோம்.
மேலும் ரவி கூறிய தகவலை வைத்து பிரிஜ்கிஷோர், பிரிதம், உமேஷ் என்ற மூவரையும் கைது செய்தோம். இந்தச் சம்பவத்தில் தொடர்பு உடைய குட்டு மற்றும் ஷாமு ஆகிய இருவரையும் தேடி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் பூங்கா அமைந்திருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அப்பெண் ஆபத்தான கட்டத்தை தாண்டி சிகிச்சை பெற்று வருகிறார்” எனத் தெரிவித்தனர்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?