“எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் ஸ்டாலின்” - ஆர்.பி.உதயகுமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எழுதிய பாட்டில் குறைகண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 


Advertisement

தமிழக அரசின் சாதனையை விளக்கும் வண்ணமாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தொடர் ஜோதி நடைபயணம் ஐந்தாம் நாள் நடைபெறுகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்பு யாரால் நிறுத்தப்பட்டது என்பது மக்களுக்கு தெரியும். பாட்டு எழுதி பெயர் வாங்குபவர்கள் இருக்கின்றனர். அதில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். ஸ்டாலினை பார்த்தால் பாட்டெழுதி பெயர் வாங்குபவராக தெரியவில்லை. எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து அதன் மூலமாக பெயர் வாங்கலாம் என்று நினைக்கிறார்.


Advertisement

உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அனுமதித்தால் போட்டியிடுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது தெரிந்த விஷயம் தான். எழுதி வைக்கப்பட்ட நாடகம் அரங்கேற்றப்படுகிறது. திமுகவில் இருப்பது மன்னராட்சி. அதிமுகவில் இருப்பது ஜனநாயக ஆட்சி.” எனத் தெரிவித்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement