அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு, தனிச்சிறப்புமிக்க பொதுசேவை ஆற்றும் சாதனையாளர் என்ற விருது வழங்கப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நவ.8 முதல் நவ.17 வரை 10 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஓபிஎஸ் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நவ.8-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு சிகாகோ சென்றார். நேற்று உலக வங்கியின் தலைமை அலுவலத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், வாஷிங்டனில் இந்திய- அமெரிக்க சிறு குறு நடுத்தர தொழில் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் பெறுவது குறித்து, விரிவாக ஆலோசித்தார். இந்நிகழ்வின் போது, தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், இந்திய - அமெரிக்க சிறு குறு நடுத்தர தொழில் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தப் பயணத்தின் போது 'ரைசிங் ஸ்டார் விருது' உள்ளிட்ட பல விருதுகள் ஓபிஎஸ்க்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Loading More post
மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் - முதல்வர் பழனிசாமி
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
ரஷ்யா: அரசை விமர்சித்ததாக நாவல்னி கைது - விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!