[X] Close

இலங்கை அதிபர் தேர்தல் - நாளை நள்ளிரவு 12 மணிக்கு முடிவுகள் வெளியாகும் 

Subscribe
In-Sri-Lanka--presidential-election

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் நாளை நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிடப்படுமென தேர்தல் ஆணையக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


Advertisement

தேர்தலையொட்டி இலங்கையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள‌ன. நாளை காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவுக்குத் தேவையான உபகரணங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் ஒரு கோடியே 67 லட்சம் பேர், இலங்கை அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர்.


Advertisement

தேர்தல் முடிந்த உடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி விடும். இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நாளை நள்ளிரவு 12 மணி அளவில் வெளியிடப்படுமென தேர்தல் ஆணையக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முழுமையான முடிவுகள் 18ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்படும் என கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் அமைப்பு, இந்தியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close