வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி பேட்டி

வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி பேட்டி
வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி பேட்டி

ரஜினி கூறியது போல தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சில நாள்களுக்கு முன்பு போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டருகே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார்.

இதனிடையே தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார். இதேபோல், தமிழக அரசியல் வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே நிரப்பிவிட்டதாக நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com