’இனி எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்’: மனம் திறந்தார் விராத் கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, இனி எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.


Advertisement

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல், மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். இதுபற்றி இந்திய கேப்டன் விராத் கோலியிடம் கேட்டபோது, ’’சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது, வீரர்கள் தங்கள் மனநிலை குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். மேக்ஸ்வெல் வெளிப்படையாகக் கூறி எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது.


Advertisement

இதே போன்ற ஒரு காலக்கட்டத்தை நானும் சந்தித்திருக்கிறேன். 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரின் போது, இனி எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்தேன். அடுத்து என்ன செய்வது, யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் தவித்தேன். வெளியே சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று தயங்கினேன். நான் அப்போது சரியான மனநிலையில் இல்லை. மன அழுத்தம் என்னை பாதித்தது. இந்த விஷயத்தில் மேக்ஸ்வெல் முன்மாதிரியாக இருக்கிறார். வீரருக்கு இடைவெளி தேவைப்படும் போது அதை தைரியமாக சொல்ல வேண்டும்’’ என்றார்.


 

loading...

Advertisement

Advertisement

Advertisement