ஸ்மார்ட் சிட்டி: தியாகராயர் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை தியாகராய நகர் சாலை, சீர்மிகு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டதையடுத்து அங்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.


Advertisement

Related image

சென்னை தியாக‌ராயர் சாலையில் இருவழிப் பாதை போக்குவரத்தினை ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாசாலையில் இருந்து பனகல் பார்க் நோக்கி செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை சந்திப்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனகல் பார்க் செல்ல, தணிகாசலம் சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி வெங்கட்நாராயணா சாலை சந்திப்பில் இருந்து பனகல் பார்க் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. பனகல் பார்க்கில் இருந்து அண்ணாசாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை சந்திப்புக்கு செல்ல, பிரகாசம் சாலை, ஜி.என் செட்டி சாலை வழியாக சென்று வாணிமகால் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி ம.பொ.சிவஞானம் சிலை சந்திப்பில் இருந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement