கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் மணிவாசகத்தின் உடல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுபடி சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் - காடையாம்பட்டியைச் சேர்ந்த, மாவோயிஸ்ட் இயக்கத் தலைவரான மணிவாசகம் உள்ளிட்ட 4 பேர், கடந்த 28ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்டுகளான இவரது மனைவியும் தங்கையும் திருச்சி மத்திய சிறையில் உள்ளனர். மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண, அவரது மனைவிக்கு ஒரு மாத பரோல் கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மணிவாசகத்தின் உடலை சேலம் அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் வைக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட மணிவாசகத்தின் உடல், அங்குள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்ட ஆதரவாளர்கள் வீரவணக்கம் செலுத்துவதாக முழக்கங்களை எழுப்பினர். பாதுகாப்பு கருதி மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கேரள துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மற்றொரு மாவோயிஸ்ட்டான கார்த்திக்கின் உடல், கோவை நஞ்சுண்டாபுரம் மின்மயானத்தில் காவல்துறை பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.
Loading More post
“கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை!” - இந்து சமய அறநிலையத்துறை
கொரோனா பாதிப்பில் 3 மாநிலங்களின் 50 மாவட்டங்களில் மோசமான நிலை: மத்திய அரசு எச்சரிக்கை
“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” - தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!