மதுரையில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போலி மருத்துவர் ஒருவர் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக ஆட்சியர் வினய்க்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தாக கூறப்படுகிறது. அதன்படி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் சிவக்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தனியார் கிளினிக் நடத்தி வந்த சுந்தரபாண்டியன் என்பவர், பத்தாவது மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது. இந்த போலி மருத்துவரை கைது செய்த மருத்துவக் குழுவினர், சாப்டூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பேரையூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான போலீஸார், சுந்தரபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்ததாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!