ரஜினியின் ‘தலைவர்168’ படத்திற்கு இசையமைக்கும் டி இமான் - தயாரிப்பாளர் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினியின் புதிய படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’.இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் போதே பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்கள் முன்புதான் முற்றிலுமாக முடிவடைந்தது. இப்போது படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ‘தர்பார்’ முடிந்தவுடன் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார் எனப் பேசப்பட்டு வந்தது.


Advertisement

ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாததால் ‘தலைவர்168’ என ஹேஷ்டேக் மூலமே செய்திகள் பரப்பட்டு வருகிறது. இயக்குநர் சிவா, இயக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில், பிற நடிகர்கள் யார் யார் நடிக்க உள்ளனர் என்ற விவரம் வெளியாகவில்லை. 

இப்போது இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் “நாங்கள் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிடுகிறோம். முதன்முறையாக ரஜினியின் ‘தலைவர்168’ படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.  

loading...

Advertisement

Advertisement

Advertisement