கேரளாவில் செயல்படும் மத்திய அரசின் கப்பல்தளங்களில் ஒன்றான ‘கொச்சின் ஷிப்யார்டு’ லிமிடெட் நிறுவனத்தில் ஃபிட்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிப் பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சிப் பணிகள்: வெர்க்மேன் (Workmen)
1. ஃபிட்டர் - 214
2. வெல்டர் - 30
3. எலக்ட்ரீசியன் - 85
4. ரிக்கர் - 40 உள்ளிட்ட பல்வேறு பணிகள்
மொத்தம் = 671 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 15.11.2019
வயது உச்சவரம்பு:
15.11.2019 அன்றுக்குள், 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வுக்கட்டணம்: ரூ.100
குறிப்பு:எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் போன்றோர்களுக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, 10ஆம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்று அத்துடன் ஐடிஐ சான்றிதழ் படிப்பையோ அல்லது ட்ரேடு தேர்வில் தேர்ச்சியோ பெற்றிருத்தல் அவசியம். மேலும் 3 வருட துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
1. ரிக்கர் பணிக்கு, 4-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஐடிஐ சான்றிதழ் அவசியமில்லை.
2. ஜெனரல் ஒர்க்கர் பணிக்கு, 7-ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் ஒரு வருட / 2 வருட உணவுத்துறை சார்ந்த சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.cochinshipyard.com/ (அல்லது) https://cochinshipyard.com/career.htm - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
1. ஐடிஐ (NTC) மதிப்பெண்கள்
2. NAC மதிப்பெண்கள்
3. செய்முறை தேர்வு
பயிற்சி காலம்: 3 - வருடங்கள்
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
https://cochinshipyard.com/career/Vacancy%20notification%20-%20Contract%20workmen%202019.pdf - என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு