‘பிகில்’ ஜெர்சியை இளம் நடிகருக்கு பரிசாக கொடுத்த விஜய்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘பிகில்’ படத்தில் விஜய் அணிந்திருந்த ஜெர்சியை இளம் நடிகர் ஒருவருக்கு அன்பு பரிசாக வழங்கி உள்ளார்.


Advertisement

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு விஜய் நடிப்பில் திரைக்கு வந்த படம் ‘பிகில்’. இதனை அட்லி இயக்கி இருந்தார். இப்படம் வெளியாவதில் இறுதி நேரம் வரை சில சிக்கல்கள் இருந்தன. அதனை மீறி படம் திரைக்கு வந்த போது விஜயின் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இதில் விஜயுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வெளியாகின. 


Advertisement

இந்தப் படத்தில் கால்பந்தாட்டம் பயிற்சியாளராக நடிகர் விஜய் நடித்திருந்தார். அவருடன் பல இளம் பெண் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர். இதில் விஜய் பயிற்சியாளராக சிகப்பு நிற ஜெர்சி உடையை அணிந்திருந்தார். அந்த ஜெர்சியை தனக்கு விஜய் வழங்கிவிட்டதாக நடிகர் செளந்தர ராஜன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விஜய் அண்ணா ‘பிகில்’ படத்தில் இந்த ஜெர்சியை அணிந்திருந்தார். அதை எனக்குப் பரிசாக கொடுத்துவிட்டார். நான் அவருடன் உணர்ச்சிபூர்வமாக இணைந்துள்ளேன். நினைத்துப்பார்த்தால் இந்த ஆண்டு கிடைத்த சிறந்த பரிசாக இது இருக்கும். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். விஜய் அண்ணாவுக்கு மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement