சீனாவின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா சிங்கிள்ஸ் தினத்தையொட்டி நடத்திய மெகா தள்ளுபடி விற்பனையில் ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
பிரபல தொழிலதிபர் ஜாக் மா தொடங்கிய அலிபாபா நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் 11ஆம் மாதம் 11ஆம் தேதி அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்கு 'சிங்கிள்ஸ் டே சேல்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி நேற்று காலை மெகா ஆஃபர்கள் மற்றும் அதிரடி தள்ளுபடிகளுடன் சிங்கிள்ஸ் டே விற்பனை தொடங்கியது.
விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 நிமிடங்கள் வேகமாக ஒரு லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முழுவதும் 'சிங்கிள்ஸ் டே சேல்' நடைபெறவுள்ளது. அலிபாபா நிறுவனத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஜேக் மா பதவி விலகியதையடுத்து புதிய தலைவராக டேனியல் சாங் பதவி வகித்து வருகிறார்.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு