JUST IN
  • BREAKING-NEWS ‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் இருக்காது..! - சுப்பிரமணியன் சுவாமி
  • BREAKING-NEWS ‌கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‌இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்
  • BREAKING-NEWS ‌சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS ‌’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு
  • BREAKING-NEWS ‌இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

“போதை பழக்கத்தை தூக்கி எறியுங்கள்... இல்லாவிட்டால்...” - எஸ்.ஐ. எச்சரிக்கை 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் வாட்ஸ்ஆப் ஆடியோ மூலம் எச்சரித்துள்ளார்

மதுரை மாநகர் பகுதியில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் கஞ்சா , போதை மாத்திரை உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வருவதாக கூறப்படுகிறது . இதுபோன்றவர்கள் திருட்டு , கொள்ளை , கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சர்வசாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் கடந்த சில மாதங்களில் மட்டும், போதைக்கு அடிமையானவர்களால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Image result for whatsapp images

இந்நிலையில் மதுரை செல்லூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தியாகபிரியன் என்பவர், இதுபோன்று போதைக்கு அடிமையாகி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கம் பட சூர்யா போல் மிரட்டல் எச்சரிக்கை ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த ஆடியோவில் “ ஒரு அண்ணனாக சொல்கின்றேன். தேவையற்ற வேலைகளை நிறுத்தவும், இல்லாவிட்டால் சிங்கத்தின் அசூரவேட்டை தொடரும், அப்துல்கலாமின் கனவான 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதை நிரூபிக்க போதைகளை தூக்கி எரிந்து நல்வழியில் செல்ல வேண்டும்.

இதுவரை பொறுமையாக இருந்தேன். இனி இருக்கமாட்டேன். என போதைக்கு அடிமையாக உள்ளவர்களை எஸ்.ஐ எச்சரித்து பேசிய வாட்ஸ்ஆப் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
 

Advertisement: