காதலை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்தி வருகிறார்கள் நம்மூர், புல்லிங்கோ’ஸ்! காதல், எல்லா கோணங்கித் தனங்களையும் செய்யச் சொல்லும் என்கிறது அனுபவஸ்தர்களின் வாய்ஸ். அதேபோல, இங்கிலாந்து இளைஞர் ஒருவர் வித்தியாசமாக தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.
இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிளவ்ஸ்டர் (Gloucester) பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தோழியுடன் டாட்டூ ஸ்டூடியோவுக்குச் சென்றார். ’இங்கு எதற்கு அழைத்து வந்தான்?’ என்று தோழிக்குப் புரியவில்லை. ’டாட்டூ குத்தப் போறேன்’ என்று தோழியிடம் சொல்லிவிட்டு டி-சர்ட்டை கழற்றியடி அந்த இளைஞர் உட்கார்ந்தார் ஸ்டூடியோவில். ’நீ வேணா கொஞ்சம் வெளியில வெயிட் பண்றியா?’ என்றார் தோழியிடம். சரி என்ற தோழி சென்றார். பிறகு, டாட்டூ குத்துபவரிடம் மெதுவாக விஷயத்தைச் சொன்னார். ’நான் காதலை வித்தியாசமா வெளிப்படுத்தப் போறேன். ’will you marry me?’ ன்னு எழுதிட்டு பக்கத்துல, Yes, No ன்னு இரண்டு பாக்ஸ் போடணும்’ என்றார்.
டாட்டூ குத்துபவர் ’ஓகே’ என்று அவர் விரும்பியபடியே செய்தார். பிறகு தனது தோழியை அழைத்த இளைஞர், நெஞ்சை அவரிடம் காண்பித்தார். ’அடப்பாவி, இப்படியா பண்ணுவே? என்று ஆச்சரியமடைந்த தோழி, ’Yes’ பாக்ஸை தொட்டு, வெட்கத்தில் ஓகே சொல்ல, அவர் முன்பே, Yes, பாக்ஸில் ஆட்டின் வடிவத்தை டாட்டூ குத்தினார் இளைஞர்.
’ஏம்பா அந்தப் பொண்ணு ’No’வை தொட்டிருந்தா என்ன பண்ணுவே?’ என்று ஒருவர் கேட்டதற்கு ’அப்படி பண்ண மாட்டாங் கன்னு தெரியுமில்ல?’ என்கிறார் இந்த இங்கிலாந்து காதலர்! பிறகு அங்கேயே காதலிக்கு மோதிரத்தை அணிவித்து நிச்சயதார்த்தையும் முடித்துவிட்டார்.
காதலை இப்படி வித்தியாசமாக வெளிப்படுத்திய அந்த இளைஞரும் இளைஞியும் தங்கள் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர், இப்படி அமர்க்களமாக!
Loading More post
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
”தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை” - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கொரோனா பரவல்: தேர்தல் பேரணிகளை ரத்து செய்த ராகுல் காந்தி
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி