காற்றுமாசு காரணமாக போட்டியை பாதியில் நிறுத்துமாறு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் விடுத்த கோரிக்கையை நடுவர்கள் நிராகரித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் ஒரு நாள் தொடர் நடக்கிறது. இந்தத் தொடர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 2 வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற வீரர்களில் ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன், பொல்லார்ட் உட்பட வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் பலர், காற்று மாசு காரணமாக, மாஸ்க் அணிந்தபடி விளையாடினர். ஒரு கட்டத்தில் போட்டியை சிறிது நேரம் நிறுத்தும்படி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நடுவரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அதேபோல ஆட்டத்தின் போது, கருப்பு நிறப் பூச்சிகள் மைதானத்தில் குவிந்து வீரர்களை தொந்தரவு செய்தன.
இந்தப் போட்டியில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் 67 ரன்களும் லெவிஸ் 54 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய ஆப்கான் அணி, 45.4 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி, 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கான் அணியில் நஜிபுல்லா ஸட்ரன் மட்டும் அதிகப்பட்சமாக 56 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்.
போட்டிக்குப் பின் பேசிய பொல்லார்ட், ’’இவ்வளவு பூச்சிகளுக்கு மத்தியில் விளையாடியது புதிய அனுபவம்’’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு