ஆரணி அருகே 20 ஆண்டுகளாக மயான பாதையின்றி சடலத்தை தண்ணீரில் சுமந்து செல்வதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த, படவேடு ஊராட்சிக்குட்பட்ட மல்லிகாபுரம், கமண்டலாபுரம் கிராமங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இக்கிராமத்தைச் சார்ந்தவர்கள், மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் தவித்து வருவதாகவும் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களின் உடலை கமண்டல நதியில் கழுத்தளவு தண்ணிரில் சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலநிலை தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மல்லிகாபுரத்தை சேர்ந்த சின்னக்குழந்தை(70) என்பவர் இன்று காலமானர். அவரது சடலத்தை மயான பாதையின்றி கழுத்தளவு தண்ணிரில் சுமந்து சென்று அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
கடந்த ஆண்டு இதுகுறித்து தொலைக்காட்சிகளில் செய்தி வந்ததால் இப்பகுதிக்கு மயான பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதன்பின் அது கிடப்பில் போடப்பட்டதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே அரசு விரைவில் மயானப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி