‘தீர்ப்பு வந்துவிட்டது.. இனி பாஜகவால் அரசியல் செய்ய முடியாது’ - காங்கிரஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.


Advertisement

70 ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement

தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. ராமர் கோயில் கட்டப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த தீர்ப்பு கோயில் கட்டுவதற்கான கதவுகளை மட்டும் திறக்கவில்லை, பாஜக உள்ளிட்ட தரப்பினர் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதற்கான கதவுகளையும் மூடியுள்ளது” என கூறியுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement