‘மனைவியுடன்தான் முதல் நாள்..முதல் ஷோ’ - திருமணத்தை முன்கூட்டியே செய்த மம்மூட்டி ரசிகர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மம்மூட்டி பட ரிலீஸ் அன்று நடக்க இருந்த தனது திருமணத்தை, முன் கூட்டியே மாற்றி ரசிகர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.


Advertisement

கேரள மாநிலம் வடக்கு பரவூர் பகுதியை சேர்ந்தவர் மேமோன். மம்மூட்டியின் தீவிர ரசிகரான இவருக்கு வரும் 21 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. அன்றுதான், மம்மூட்டி நடித்துள்ள ’மாமாங்கம்’ படமும் ரிலீஸ் ஆகிறது. பத்மகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் வரலாற்றுக் கதையை கொண்டது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Advertisement

இந்நிலையில், வழக்கமாக மம்மூட்டி படத்தை, முதல் நாள், முதல் ஷோவில் பார்க்கும் பழக்கம் கொண்ட மேமான் என்ற ரசிகர், தனது திருமணத்தை முன் கூட்டியே நடத்த முடிவு செய்தார். அதன்படி மணமகள் வீட்டில் பேசி கடந்த 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து தனது இளம் மனைவியுடன் ’மாமாங்கம்’ படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்க்க உள்ளதாகத் தெரி வித்துள்ளார் மேமான்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement