மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் படுகாயம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புளியந்தோப்பு பகுதியில் மாஞ்சா நூல் அறுத்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.


Advertisement

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். வயது 25. மெடிக்கல் ரெப் ஆக வேலை பார்த்து வருகிறார். இன்று மாலை வேலை தொடர்பாக புளியந்தோப்பு கன்னிகாபுரம் மைதானம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் இவரது கழுத்தின் ஓரத்தில் பட்டது.


Advertisement

அப்போது சுதாரித்துக் கொண்ட ராஜசேகரன் உடனடியாக வண்டியை நிறுத்தினார். மாஞ்சா நூல் அறுத்ததில் அவருக்கு லேசான வெட்டுக்காயம் கழுத்தில் ஏற்பட்டது. அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். புகார் தொடர்பாக, மைதான பகுதியில் பட்டம் விட்ட இரண்டு சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே கொருக்குப்பேட்டை பகுதியில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் இறந்த நிலையில், தற்போது மீண்டும் மாஞ்சா நூல் அறுத்து வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement