ட்விட்டர் நிறுவனம் பாகுபாடு பார்ப்பதாக எழுந்த புகாருக்கு ட்விட்டர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், CancelAllBlueTicksinIndia என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான திலீப் மண்டல், ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றம்சாட்டி, VerifySCSTOBCMinority என்ற ஹேஷ்டேக்கை தொடங்கினார்.அதனைத் தொடர்ந்து, பழங்குடியினத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, 26 ஆயிரத்துக்கும் அதிகமான பயனாளர்கள் பின்தொடர்ந்தும், தன்னுடயை ட்விட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்டு நீல நிற டிக் வழங்கப்பட்டவில்லை என்றும், அதில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இந்தப் புகாருக்கு இன்று ட்விட்டர் இந்தியா நிறுவனம் விளக்கமளித்துள்ளது " கடந்த ஒரு வாரமாக ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். இதை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். என்னவென்றால் எந்தவொரு வடிவமைப்பிலும், நிறுவனத்தின் சட்டத் திட்டங்களிலும் நாங்கள் எந்தவொரு பாகுபாடு்ம் பார்ப்பதில்லை. அதேபோல எந்தவொரு சித்தாந்த சார்பிலும் அரசியல் பார்வையிலும் செயல்படுவதில்லை" என தெரிவித்துள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!