பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றுள்ளது. அத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
கடந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியை வெல்ல இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இன்று நடைபெறும் போட்டி ரோகித் ஷர்மாவின் 100வது டி20 போட்டி என்பதால், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் கேப்டன் ரோகிஷ் ஷர்மா உள்ளார். இருப்பினும் இன்றைய போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்