"கோட்டையில் நின்றபடி பார்க்கும் இந்தியன் தாத்தா"- வாழ்த்து தெரிவித்த ஷங்கர்

Director-Shankar-shared-new-photo-of-Kamalhasan-from-Indian-2


இந்தியன் 2 படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

Image

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் திரையுலகில் தனது 60-ஆவது ஆண்டை வெற்றிகரமாக முடித்து தொடர்ந்து பயணித்து வருகிறார். அதனையும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Image

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிறந்தநாள் வாழ்த்துகள் சார்" என பதிவிட்டு, ராஜஸ்தான் மாநிலம் குவாலியர் கோட்டையில் நின்றபடி நிற்கும் இந்தியன் தாத்தாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Image


Advertisement

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன்2’. சில தினங்களாக போபால் அருகே குவாலியரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிவடைந்தது. இங்கு மிக முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதற்காக பெரிய பொருட்செலவில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் வடிவமைத்த காட்சிகள் எடுக்கப்பட்டன. அத்துடன், இந்த நகரத்தின் பரபரப்பான சாலைக் காட்சிகள் சிலவும் படமாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

Image

இதனையடுத்து கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் முடிவடைந்த பின் அவர் மீண்டும் குவாலியரில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். அடுத்த படப்பிடிப்பு இந்த மாதம் 13 மற்றும்  14 ஆம் தேதிகளில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement