“ஆதித்யா அருணாச்சலம்” - அதிரடியாக வெளியான ‘தர்பார்’மோஷன் போஸ்டர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் ரஜினிகாந்த் திரைப்படமான ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.


Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் ‘தர்பார்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தர்பார்’ குறித்த புதிய அப்டேட்டை சமீபத்தில் கொடுத்திருந்தார். அதில், கமல் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார்.


Advertisement

இதைத்தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டரை தமிழில் கமல்ஹாசன் இன்று மாலை வெளியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியது. அதன்படியே, படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் போலீஸ் உடையில் கத்தியுடன் வரும் ரஜினிகாந்த் ரவுடிகளை வெட்டி வீழ்த்துகிறார். ரஜினியின் பெயர் ‘ஆதித்யா அருணாச்சலம்’ என பேட்ஜில் உள்ளது. இந்தக் காட்சிகளுக்கு பின்னணியில் அனிருத்தின் தலைவா என்ற குரலுடன் பிஜிஎம் ஓடுகிறது. ‘பேட்ட’ படத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு அதிரடி திரைப்படத்தில் ரஜினி வலம் வரப்போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.


Advertisement

இந்த மோஷன் போஸ்டரை ஹிந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் வெளியிட்டுள்ளனர்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement