தங்க கழிப்பறையில் பளபளக்கும் 40,000 வைர கற்கள்..! 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவில் தங்கக் கழிப்பறை செட்டிற்கு 40,000 வைர கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

சீனாவில் கின்னஸ் உலக சாதனைக்காக தயாரிக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை ஒன்று, ஒரு வர்த்தக விழாவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த தங்கக் கழிப்பறையில் தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைர கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது. கழிப்பறையின் தற்போதைய மதிப்பு 12 லட்சம் அமெரிக்க டாலர்களாக கணிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மேலும் இந்த தங்கக் கழிப்பறையுடன் அதே வர்த்தக விழாவில் 400 கேரட், வைர கற்களால் ஆன கிடார் இசை கருவியும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிடார் கருவியில் வெள்ளை தங்கமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிடார் கருவியின் விலை 2 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த இரண்டையும் பார்த்த பார்வையாளர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அத்துடன் சமூக வலைதளத்தில் இந்த இரண்டு படத்தையும் மக்கள் மிகுந்த வியப்புடன் பார்த்து வருகின்றனர்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement