‘நட்சத்திர விடுதியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள்’ சூடுபிடித்த மகாராஷ்டிரா அரசியல் களம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், சிவசேனா எம்.எல்.ஏக்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

இதனிடையே, தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தன்னுடைய அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் செய்தி வெளியிட்டுள்ளது. 


Advertisement

இந்நிலையில், தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை ரங்ஷர்தா ஹோட்டலில் சிவசேனா தங்க வைத்துள்ளது. மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே வீட்டிற்கு அருகில் உள்ள ஹோட்டலில் அவர்கள் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். உத்தவ் தாக்கரே இல்லத்தில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். 


Advertisement

இதனிடையே, ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக தலைவர்கள் குழு ஆளுநரை தற்போது சந்தித்து பேசி வருகின்றனர். மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக அரசின் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் களத்தில் முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

loading...

Advertisement

Advertisement

Advertisement