"24 மணி நேரத்தில் உருவாகும் ‘புல் புல்’ புயல்" - வானிலை ஆய்வு மையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வங்கக் கடலில் வலுபெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Advertisement

Image result for bulbul cyclone

வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ளது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

Image result for bulbul cyclone

இதனிடையே, அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதாக கூறியுள்ளது. இது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் ‘புல் புல்’ புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Image result for bulbul cyclone


Advertisement

இந்த புயலானது மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஒடிசா அருகே கரையை கடக்கும் எனவும் கூறியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு மழை இருக்காது என்றபோதும் மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

loading...

Advertisement

Advertisement

Advertisement