தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார் கமல்ஹாசன் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக இயக்குநர் முருகதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Image

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட முருகதாஸ் "தர்பார் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன் நாளை வெளியிடுகிறார். அதேபோல பாலிவுட்டுக்காக நடிகர் சல்மான் கானும், மலையாள திரையுலகத்துக்காக நடிகர் மோகன்லாலும் வெளியிடுகின்றனர். நாளை நம்ம தலைவர் ரஜினிகாந்த்தை பார்ப்போம், அனிருத்தின் மாஸ் தீம் மியூசிக்குடன்" என பதிவிட்டுள்ளார். மேலும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Image

இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் "கமல் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வெளியாகும்" எனத் தெரிவித்திருந்தார். 

Image


Advertisement

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனம் ‘தர்பார்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement